பூதலூர், வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தேசிய அளவிலான கபாடி போட்டிக்கு தேர்வாகியுள்ளார். தேசிய அளவிலான 2025 ஆம் ஆண்டு சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான கபடி போட்டியில் தமிழக அணிக்காக நம் வித்யா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி M.ஸ்ரீதர்ஷினி தேர்வாகியுள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். M.ஸ்ரீதர்ஷினி தேசிய அளவில் வெற்றி வாகை சூடி வர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் திரு. M.உதயகுமார் அவர்களுக்கு, பள்ளியின் தாளாளர் லயன்ஸ் திரு. A.பாண்டியன், திருமதி P.செல்வகுமாரி பாண்டியன், பள்ளியின் முதல்வர் திரு A.தேவன்பு ஆகிய அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறார்கள்.